தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனக்கு துணை முதலமைச்சர் பதவி தருவதாக கூறி சில கட்சிகள் வலைவிரிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
ராணிப்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் “இந்து மதத்தை மட்டும் நீங்கள் விமர்சிக்கிறீர்களே என சிலர் கேட்கின்றனர். அது சகோதரத்துவமாக இல்லை என்பதுதான் பிரச்சினை. இதை பாஜகவோ, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளோ சுய விமர்சனமாக எடுத்துக் கொள்வதில்லை.
திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் அனைவரும் மதசார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ளோம். காங்கிரஸோடு நமக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர்களும் மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்கிறார்கள். சனாதனம் பற்றி திருமா பேசினால் சர்ச்சை ஆகாதது, உதயநிதி பேசினால் சர்ச்சை ஆகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழகத்தை காப்போம், மக்களை காப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தற்போது நடைப்பயணம் புறப்பட்டுள்ள சிலருமே பாஜகவை ஆதரிப்பவர்கள்தான். விசிக இல்லாவிட்டாலும் திமுக அவரளை தனியாகவே எதிர்க்கும்.
நானும் ரவுடிதான் என்பது பல பலர் கிளம்புகின்றனர். முதலமைச்சர் ஆக்குங்கள் என்கின்றனர். நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? துணை முதல்வர் பதவி தருவதாக அழைக்கின்றனர். 35 ஆண்டுகளாக அரசியலில் உள்ள நான் கலைஞர், ஜெயலலிதா, மு க ஸ்டாலின், ராகுல்காந்தி என அனைவரோடும் அரசியலில் பயணித்துள்ளேன். துணை முதல்வர் பதவி தருவதாக ஆசைக்காட்டினால் வந்து விடுவேன் என நினைக்கின்றனர்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K