இன்று கிறிஸ்தவ புனித பண்டிகையான ஈஸ்டர் கொண்டாடப்படும் நிலையில் அரசியல் பிரமுகர்கள் மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயேசு பிரான் மரித்து 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகையில் வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “இயேசுபிரான் சக மனிதர்களின் பாவங்களைப் போக்கத் தன்னையே தியாகம் செய்து மீண்டும் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துகள். புதிய நம்பிக்கையை உருவாக்கும் இத்திருநாளில் அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல அரசியல் பிரபலங்களும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.