திருடிவிட்டு சாவகாசமாக ஸ்னாக்ஸ் சாப்பிட்டுவிட்டு சென்ற திருடன்: கோவையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (05:24 IST)
கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடன், அந்த வீட்டில் இருந்த நகை, பணம், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்தது மட்டுமின்றி பிரிட்ஜில் இருந்த ஸ்னாக்ஸ், கூல்டிரிங்க்ஸ் ஆகியவற்றை சாவகாசமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவையை சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து ஊரில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் இரவு பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்ற திருடன் ஒருவன் அந்த வீட்டில் இருந்த  5 சவரன் தங்க நகை,50 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடியுள்ளான்.



 
 
அதுமட்டுமின்றி பிரிட்ஜை திறந்து அதில் இருந்து ஸ்னாக்ஸ், பழங்கள் ஆகியவற்றை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, பின்னர் கூல்டிரிங்க்ஸையும் குடித்துவிட்டு சென்றுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர் மூலம் திருடனை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்