'பாபநாசம்' பட பாணியில் ஒரு கொலை: நெல்லையில் ஒரு திடுக் சம்பவம்

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (23:59 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் இளைஞர் ஒருவரை கொலை செய்து பிணத்தை வே|று இடத்தில் புதைத்துவிட்டு காரை மட்டும் கல்குவாரியில் தள்ளிவிடும் ஒரு காட்சி வரும். கிட்டத்தட்ட அதேபோல் நெல்லை அருகே உண்மையாகவே ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது.



 

 
 
நெல்லையை சேர்ந்த 42 வயது முத்துகிருஷ்ணன் என்பவர் அமெரிக்காவின் க்ரீன் கார்ட் ஹோல்டர். இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு திரும்பிய நிலையில் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் பிரிய முடிவு செய்து விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் காரில் வழக்கறிஞரை பார்க்க சென்ற முத்துகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இவருடைய தாயார் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் கார் ஒன்று கல்குவாரியில் மூழ்கியிருப்பது குறித்த தகவல் வெளிவந்தது. இந்த காரை வெளியே எடுத்து பார்க்கும்போது அதில் முத்துகிருஷ்ணன் பிணமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார் கொலையாளிக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்