மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம் வெளியீடு

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (14:46 IST)
பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
 

 

 
புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டுள்ளார்.
 
முன்னாள் மதராஸ் மாகாணத்தின் விக்டோரியா ஹாலில் 2-3-1919 அன்று நடந்த கருத்தரங்கில் பாரதியார் பேச வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 
 
தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த பழமையான புகைப்படத்தையும் சேர்த்து பாரதியாரின் அசல் புகைப்படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்