தொழில் அதிபரின் மனைவிக்கு மசாஜ் செய்த இளம்பெண் திடீர் மாயம்:

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (08:26 IST)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மனைவிக்கு வழக்கமாக மசாஜ் செய்யும் அழகுநிலைய பெண் ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார். அவர் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை திருடி சென்றுவிட்டதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது
 
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலதிபர் தினேஷ்குமார் டால்மியா என்பவரின் மனைவி ராதா டால்மியா, அழகு நிலையம் ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவரை தினமும் வீட்டுக்கு வரவழைத்து மசாஜ் சிகிச்சை பெற்று வந்தார். சவுமியா என்ற அந்த இளம்பெண், ராதா டால்மியாவின் வீட்டிற்கு தினமும் கடந்த ஒரு வருடமாக வந்து மசாஜ் செய்து வந்துள்ளார்.
 
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் மசாஜ் செய்ய வந்த இளம்பெண், ராதா டால்மியா அசந்த நேரத்தில் அவருடைய ரூ.7 லட்சம் மதிப்புடைய நகையை திருடி மாயமாய் மறைந்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ராதா டால்மியா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அவர் விரைவில் போலீசாரிடம் பிடிபடுவார் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்