வங்கக்கடலில் புயல்; 26 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (08:42 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக உள்ள நிலையில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடையும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: தீபாவளி இப்படிப்பட்ட பண்டிகையா? நியூயார்க் மேயர் எடுத்த முடிவு!

அதன்படி, இன்று கன்னியாக்குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாக உள்ள புயலுக்கு ‘சிட்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 24ம் தேதி வலுவடைந்து மேற்கு வங்கம் நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்