கமல் கட்சியில் இணைந்த டிடிவி தினகரன் தம்பியின் ஆதரவாளர்கள்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (11:33 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு இதுவரை ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் நேற்றுமுதல் விண்ணப்பங்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் நேற்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் டிடிவி தினகரனின் தம்பியும் அவரது ஆதரவாளர்களால் சின்ன எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்டவருமான பாஸ்கரனின் மன்றத்தில் இருந்து அதன் மாநில இளைஞர் அணி செயலாளர் ஜெகதீஷ் குமார்  உள்பட சுமார் 500 பேர் விலகி, கமல்ஹாசனின் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் பாஸ்கரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை தனது கட்சியில் இணைந்த இளைஞர்கள் மத்தியில் பேசிய கமல், நமது கட்சியின் தொண்டர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், மக்களின் சேவை ஒன்றே முன்னிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்