B.Arch., படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (17:06 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களும் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கல்லூரி வகுப்புகள் படிப்படியாக நடைபெற்று வரும் நிலையில் B.Arch.,படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதியை தொழில்நுட்பம் சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
இதன்படி B.Arch., படிப்பில் சேருவதற்கு கலந்தாய்வு வரும் 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது
 
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு B.Arch.,படிப்புக்குவிண்ணப்பித்தவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்