அரசாங்கத்துக்கு எதிரான புத்தகம் விற்க கூடாதுன்னு இல்லை! – உதவி தலைவர் கடிதம்!

திங்கள், 13 ஜனவரி 2020 (15:47 IST)
அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக ‘மக்கள் செய்தி மையம்’ என்ற புத்தக கண்காட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அதுகுறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் பபாசி துணை தலைவர்.

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக ஏற்பட்ட சர்ச்சையில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் விற்பனை செய்யப்பட்டதால் அந்த புத்தகக்கடையை உடனே அகற்றுமாறு  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி கடையை அகற்றிய பிறகும் அவர்மேல் சண்டையில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அன்பழகன் கைது செய்ய்யப்படத்தை கண்டித்து திருமா, ஸ்டாலின் உள்ளிட்டோர் மீண்டும் புத்தக அரங்கில் அவருக்கு இடம் தர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அன்பழகனின் பதிப்பகம் அகற்றப்பட்ட சம்பவம் குறித்து கடிதம் எழுதியுள்ள பாரதி புத்தகாலய உரிமையாளர் நாகராஜன் ”அரசால் தடை செய்யப்பட்ட புத்தகங்களை விற்க கூடாது என்றுதான் விதிமுறை இருக்கிறதே தவிர, அரசை விமர்சிக்கும் புத்தகங்களை விற்க கூடாது என்று இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற பிரச்சினைகளில் குழு உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதையும் கண்டித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்