இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ்,துணை இயக்குனர் அருள்,கரூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கல்லூரியின் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் குறித்து மாணக்கர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும்,மாவட்ட தொழில் மையம் சார்பில் 34-பயனாளிகளுக்கு பல்வேறு தொழில் துவங்க ரூபாய் சுமார் 2-கோடியே 69-லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கி வாழ்த்தி பேசிய மாவட்ட ஆட்சியர் அன்பழகன்,உறவினர்களிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்காத இன்றைய கால கட்டத்தில் 5-முதல் 50-லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்க அரசாங்கம் முனைப்புடன் இருக்கிறது என்றும், கல்லூரி படிப்பை முடித்த மாணாக்கர்கள் பயின்ற பிறகு பணிக்கு சென்றால் மாதாந்திர ஊதியம் மட்டுமே கிடைக்கும்.ஆனால் சொந்த முயற்சியில் தொழில் துவங்கினால் பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கலாம் என்றார்.