கொரொனாவால் பச்சிளம் குழந்தை பலி...

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (20:28 IST)
கொரொனாவால் பச்சிளம் குழந்தை பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்  கொரொனா 3 வது அலையை எதிர்கொள்ள  தமிழக அரசு ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.

 மேலும், இரண்டாவது அலையை சிறப்புடன் எதிர்கொண்டது போன்று அடுத்து வரவுள்ள 3 வது அலையை எதிர்கொள்ள வேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளார். அரசு மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும்,  அதற்கான நிதியை ஒதிக்கீடு செய்துள்ளார் முதல்வர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில்,  மதுரை மாவட்டத்தில் கொரொனாவால் பாதித்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனளிக்காம உயிரிழந்ததாக சுகாதார்த்துறை தெரிவித்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கொரொனா 3 ஆம் அலை பரவ உள்ள நிலையில் இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் முன்னர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்