கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு.. சென்னை எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு..!

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:18 IST)
சென்னை எழும்பூர் மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அந்த குழந்தை தற்போது சிகிச்சையின் பலன் இன்றி இறந்து விட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
சென்னையை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது தஹிர் என்ற குழந்தைக்கு தவறான சிகிச்சை காரணமாக கை அகற்றப்பட்டதாக அந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினார். 
 
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக  குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர் 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த குழந்தை சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்த விட்டதாக தெரிகிறது. இதனால் எழும்பூர் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்