சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவிக்கு கடந்த சில மாதங்களாகவே வயிறு பெரிதாகி கொண்டே வந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கேட்டபோது வயிற்றில் கட்டி இருப்பதாகவும் நாளடைவில் சரியாகிவிடும் என்றும் கூறி மழுப்பி வந்தார்
இந்த நிலையில் நேற்று திடீரென வயிற்றில் வலி அதிகமாகவே பதறிய பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை சோதித்து பார்த்த மருத்துவர் இது வயிற்று வலி இல்லை என்றும், பிரசவ வலி என்றும், மாணவி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்
இதுகுறித்து மாணவியிடம் விசாரணை செய்தபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு மர்ம நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், இதை வெளியே கூற பயந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் கர்ப்பமானது குறித்து தனக்கே தெரியாது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்