8-ஆம் வகுப்பு மாணவிக்கு 300 தோப்புக்கரணம் தண்டனை: ஆசிரியர் மீது வழக்கு!

வியாழன், 14 டிசம்பர் 2017 (18:42 IST)
மும்பை கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் 8 பேர் சரியாக படிக்காததால் ஆசிரியை ஒருவர் 300 தோப்புக்கரணம் போடவைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சந்த்காட் தாலுகா கன்னூர் புத்ரூக் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 45 வயதான அஸ்வினி என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் சரியாக படிக்காத 8-ஆம் வகுப்பு மாணவர்கள் 8 பேரை 300 தோப்புக்கரணங்கள் போடுமாறு கூறியுள்ளார். மாணவர்கள் அனைவரும் 300 முறை தோப்புக்கரணம் போட்டனர்.
 
அதில் ஒரு மாணவிக்கு பயங்கராமன வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தனது மகளை தோப்புக்கரணம் போட்ட வைத்த ஆசிரியை மீது மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்