ஆபாச இணையத்திற்கு அடிமையாகும் மும்பை பள்ளி மாணவர்கள்

வியாழன், 14 டிசம்பர் 2017 (14:41 IST)
மும்பையைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபாச வீடியோக்களை செல்போன்கள் மூலம் பார்க்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
இன்றைய நவீன உலகத்தில் செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. நல்ல வழியில் உபயோகித்தால் அதில் இருந்து பல நல்ல விஷயங்களை கத்துக்கொள்ளலாம், மாறாக தீய வழியில் பயன்படுத்தினால் அது தனி மனித ஒழுக்கத்தை கெடுத்துவிடும்.
 
இப்பொழுது இருக்கும் சிறுவர்கள் பலர் செல்போனுடனே தான் சுற்றுகிறார்கள். அதில் ஆபாச வளைதளத்தினுல் சென்று ஆபாச படங்களை பார்க்கின்றனர். இது சொல்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் இதுவே உண்மை. இதை தாங்கள் பார்ப்பதோடு பள்ளிக்கு செல்போனை எடுத்துசென்று மற்ற மாணவர்களையும் பார்க்க வைக்கின்றனர். இதனால் பல பள்ளி மாணவர்கள் ஆபாச இணையதளத்திற்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை வீணடித்துக்கொள்கிறார்கள். நாளுக்கு நாள் ஆபாச வளைதளங்களை உபயோகிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகத்துக்கொண்டே வருவதாக மும்பை சைபர் க்ரைம் தெரிவித்துள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைத் தடுக்க பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு செல்போன்களைத் தராமல் இருக்க வேண்டும், மேலும் அவர்களின் அன்றாட நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்