கும்பமேளாவை குறை சொல்பவர்கள் தவறு செய்கிறார்கள்! – பாபா ராம்தேவ் கண்டனம்!

Webdunia
புதன், 19 மே 2021 (15:33 IST)
சமூக வலைதளங்களில் கும்பமேளாவை கிண்டல் செய்து பதிவிடுபவர்கள் குறித்து பாபா ராம்தேவ் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட கும்பமேளா, தேர்தல் போன்றவை இரண்டாம் அலை பரவ அதிகமான காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கும்பமேளா குறித்து பலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இவ்வாறான விமர்சனங்கள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாபா ராம்தேவ் “சமூக வலைதளங்கள் மூலமாக கும்பமேளாவை குறை சொல்கிறவர்கள் பெரும் தவறிழைக்கிறார்கள். அரசியல் செய்பவர்களை இந்த நாடு மன்னிக்காது. இதுபோன்ற நபர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்