இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கும் வாய்ப்பு ?

Webdunia
புதன், 19 மே 2021 (15:03 IST)
இந்தியாவில் 3,4-வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க நோய் இயக்குவியல் மைய இயக்குனர் ரமணன் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,54,96,330 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,83,248 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,19,86,363 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 32,26,719 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 18,58,09,302 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் 3,4-வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க நோய் இயக்குவியல் மைய இயக்குனர் ரமணன் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர், ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்