காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, 'மரபணு மாற்றப்பட்ட விதைகளின்மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டு வந்தால் 50% ஆண்கள் தங்களுடைய ஆண்மையை இழக்க வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தரும் ஒரு தகவலை கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பெண்களின் கருத்தரிக்கும் சக்தியும் இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட உணவால் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மரபணு மாற்றியமைப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்த கூடாது என்றும் இயற்கை விவசாயமே மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது என்றும் கூறியுள்ளார்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டிய கடமை, பிரதமர் மோடிக்கு உள்ளது என்றும் கர்நாடகா தேர்தல் முடிந்த பின்னராவ்து அவர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் கூறிய அய்யாக்கண்ணு, விவசாயிகளுக்காக இல்லை என்றாலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தாவது அவர் இதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.