இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்த மோனோ ஆக்டிங் நடைபெற்றது. இதில் சுமார் 100 மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் கரூர் நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர்