த. மா கா கட்சியின் முக்கிய நிர்வாகி பாஜகவில் இணைந்தார்

செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (23:13 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ,நெசவாளர் அணி மாநில தலைவர்         எம். அக்னி ராஜேஷ்    பாரதிய   ஜனதா  கட்சியின் தமிழகத் தலைவர் K. அண்ணாமலை IPS  தலைமையில், பாரதிய  ஜனதா  கட்சியின் தமிழக  மேலிட  பொறுப்பாளர் திருமிகு. C.T. ரவி   அவர்களின்  முன்னிலையில்    பாரதிய ஜனதா   கட்சியில் இணைந்தார்
 
தமிழ் மாநில காங்கிரஸ்-ல் கொள்கை பரப்பு செயலாளராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்  இளைஞர் அணி மாநில செயலாளராகவும், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராகவும், காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைமை அமைப்பாளராகவும், காங்கிரஸ் சேவாதள மாநில அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.

மேலும் அரசு பொறுப்புகளில் மத்திய அரசில், அகில இந்திய விசைத்தறி வாரிய உறுப்பினராகவும் , தமிழக அரசின் வேளாண்மை துறையின் கீழ்  இயங்கிவரும் திருச்சி மாவட்ட வேளாண்மை விற்பனை குழுவின் துணைத் தலைவராகவும், மத்திய அரசின், புதுப்பிக்கத்தக்க வல்ல எரிசக்தி துறையின் மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்,  பொறுப்பு வகித்த காலங்களில்   பல்வேறு முறைகேடுகளை , ஊழல்களை  தடுத்து நிறுத்தி மத்திய, மாநில அரசுகள் மூலம் அதிரடி நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு சேவை செய்து நேர்மையான அதிரடி அரசியல்வாதி என்ற பெயரை பெற்றவர்  ஆவார்.
 
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பான 110 சங்கங்களை உள்ளடக்கிய பேட்டியா - (FATIA) வினுடைய ஒருங்கிணைப்பாளராகவும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் சங்கம் மற்றும் செல்போன் சங்க ஒருங்கிணைப்பாளராகவும்  செயல்பட்டு வருகிறார் .
 
 திருச்சி SIT கல்லூரியில்  தேசிய  மாணவர் படையின் கல்லூரி தலைவர்                    ( NCC SENIOR UNDER OFFICER ) என்ற    உயர் பொறுப்பில் செயல்பட்டு, இந்திய ராணுவத்தில் 30 நாட்கள் கோவாவில் இராணுவப் பயிற்சி பெற்றவர் ஆவார். 
 
அரசியலில் மட்டுமின்றி ஆன்மீகப் பணியிலும்  மிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவர். குறிப்பாக  நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் 19 வருடங்களாக ஜாதிய பிரச்சனையால் நின்றுபோன , தமிழக அரசு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்னி மாரியம்மன்  கோவில் திருவிழாவை கடும் முயற்சி செய்து 27 ஜாதிகளைச் சார்ந்த 12 ஆயிரம் மக்களை ஒன்றிணைத்து,  தமிழக அரசு அனுமதியுடன் திருவிழாவை  முன்னின்று நடத்தி “ இறைவன் முன் அனைவரும் சமம்” என்ற சமூக நீதியை  நிலைநாட்டியவர் ஆவார்.  19 வருடங்களாக நடக்காத ஸ்ரீ அக்னி மாரியம்மன்  திருவிழாவை முன்னின்று நடத்தியவர் என்பதால் மக்கள் இவரை "அக்னி" ராஜேஷ் என்று அழைக்கிறார்கள்.
 
   நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டிக்கு அருகில் திருப்பதி திருமலைக்கு நிகரான வரலாற்று சிறப்பு வாய்ந்த  தலைமலையின் அடிவாரத்தை சுற்றி 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தியாவிலேயே பெரிய அதி நீள கிரிவலப் பாதையை உருவாக்கியவர் ஆவார்.  பௌர்ணமி தோறும் கிரிவலம் வரும் ஆயிரக்கனக்கான பக்தர்களுக்கு  உணவும், தூய குடிநீரும் மாதம் தோரும் உபயதாரர்கள் மூலம் தனது தலைமையில் வழங்கி,  தீவிர ஆன்மீக பணியில்  ஈடுபட்டு வருபவர் ஆவார்.
 
இந்நிலையில் இவர் திண்டுக்கல்லில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்த பாஜகவில் இணைந்த அக்னி ராஜேஷ் என்பவர் கூறியபோது, 
 
நேர்மையான IPS அதிகாரியாக பணியாற்றி, இளம் வயதிலேயே மக்கள் சேவை செய்திட அரசியல் களம் கண்டுள்ள தமிழக BJP மாநில தலைவர்             திருமிகு. K. அண்ணாமலை IPS அவர்களின் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாகவும், பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்களின்  நேர்மை அரசியலால் ஈர்க்கப்பட்டும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி தலைவர் JP. நட்டா ஜி , மேலிட பொறுப்பாளர் C.T ரவி ஆகியோரின்  ஆசியுடன் பாஜகவை தமிழகத்தில் வலுப்படுத்திட BJP யில்  இணைகின்றேன்  என்றும் இந்த புதிய ஆன்மீக  அரசியல் பயணத்திற்க்கு ஆதரவளித்து  தமிழகத்தில்  பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சிக்கு உதவிட நான் எப்போதும் பயணிப்பேன் என்றும் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்