கவரிங் நகைக்காக கொலை செய்த கும்பல்: திருவண்ணாமலையில் சோகம்!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:23 IST)
கவரிங் நகையை தங்கம் என நினைத்து ஆசிரியையை கொலை செய்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் உள்ள முனிவாந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் லூர்து மேரி. ஓய்வு பெற்ற அரசு ஆசிரியையான இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸ் லூர்து மேரி வீட்டருகே கறிக்கடை நடத்தி வரும் இலியாஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது.

ஆசிரையை லூர்து மேரி விதம் விதமான நகைகளை அடிக்கடி அணிந்து சென்றதாகவும் அவற்றை தங்கம் என நம்பி தனது நண்பர்களோடு சென்று ஆசிரியையை கொலை செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் இலியாஸ். அதை தொடர்ந்து இலியாஸின் நண்பர்களான யூசுப், மூசா மற்றும் விஜயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கவரிங் நகையை தங்கம் என்று நம்பி செய்ததாக சொல்லப்படும் இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்