நெருங்கும் தீபாவளி; உச்சம் தொடும் வெங்காய விலை! – கலக்கத்தில் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (10:23 IST)
தமிழக காய்கறி சந்தைகளில் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.



தமிழ்நாட்டில் உள்ள காய்கறி சந்தைகளில் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் போன்றவை அதிக அளவில் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக வெங்காய இறக்குமதி வரத்து குறைந்துள்ளது. இதனால் சண்டைகளில் வெங்காயத்தின் மொத்த விலையே அதிகரித்து காணப்படுகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூபாய் 25 விற்றுவந்த பெரிய வெங்காயம் தற்போது கிலோ ரூபாய் 60 வரை உயர்ந்துள்ளது. அதே போல சின்ன வெங்காயத்தின் விலையும் ரூபாய் 100 - 110 உயர்ந்துள்ளது. ஆயுத பூஜை சமயத்திலேயே வெங்காய வரத்து குறைந்திருந்தால் விலை அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் அடுத்த வாரம் தீபாவளி வர உள்ளது. இதனால் உணவுக்காக வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும் அதே சமயத்தில் வரத்தும் குறைந்துள்ளதால் வில்லை எக்கச்சக்கமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

அதேசமயம் வெளி மாநிலங்களில் வரத்து குறைந்திருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்