இதில், 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும், 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் விவரங்கள் மற்றும் அந்தப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களின் பட்டியலையும் தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை தொகுத்து, தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிக்கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும். எந்தவொரு தாமதமும் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் 3,088 உயர்நிலை மற்றும் 3,174 மேல்நிலை அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை சிறப்பித்து ஊக்குவிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.