அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

Siva

ஞாயிறு, 23 மார்ச் 2025 (11:19 IST)
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான பாடங்கள் கொண்டுவரப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது, அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு  ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடங்கள் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
 
இந்த பாடத்திட்ட மாற்றம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு செய்யப்படும். 15 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து, பள்ளிக்கல்வி நவீனப்படுத்த தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
 
மேலும், 62 பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2291 ஆரம்பப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
 
அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏஐ  தொடர்பாக பயிற்சி அளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்