ரஜினியால் சசிகலாவிற்கு சவாலா? - சுப்பிரமணிய சாமி

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (16:34 IST)
ரஜினியால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எந்தவொரு சவாலும் வரப்போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.


 

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், ”ரஜினிகாந்த் எந்த விஷயத்திலும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது கிடையாது. அவருக்கு தமிழக அரசியலில் எதிர்காலம் கிடையாது.

மேலும், ரஜினிகாந்த் தமிழக அரசியலில் எந்தவொரு பங்களிப்பையிம் செலுத்தியது கிடையாது. ரஜினியால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எந்தவொரு சவாலும் வரப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்