டெல்லி செல்கிறார் அண்ணாமலை: ஜேபி நட்டாவுடன் முக்கிய சந்திப்பு!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (19:14 IST)
சமீபத்தில் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாகவும் அங்கு பாஜக தேசிய தலைவர் அவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதில் தீவிரமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அவர் டெல்லியில் இருப்பார் என்றும் தகவல்கள் வந்துள்ளன
 
மேலும் டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தேசிய கட்சி தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசுகிறார் என்றும் இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம் குறித்து அவர் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
அதுமட்டுமன்றி டெல்லியில் மூத்த பாஜக தலைவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்