தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றை சொல்லி புலம்பும் உதயநிதி: அண்ணாமலை கண்டனம்

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (16:46 IST)
தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றை சொல்லி புலம்புகிறார் உதயநிதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின்  தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். 
 
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். 
 
1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்