எல்லோரும் ஜெனரேட்டர் வாங்குங்க, மின்வெட்டு வரப்போகுது: அண்ணாமலை

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (14:00 IST)
எல்லோரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழகத்தில் மின்வெட்டு வரப்போகுது என்றும் தமிழக பாஜக தலைவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சியில் கடும் மின்வெட்டை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது மக்கள் நிம்மதி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் மின்வெட்டு வரப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்
 
விரைவில் மின்வெட்டு ஏற்படும் என்பதால் அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் பிஜிஆர் நிறுவனம் என்ற பெயரில் இயங்க கூடிய நிறுவனத்திற்கு மின்வாரியத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்