இது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை - ஓபிஎஸ் & ஈபிஎஸ் கூட்டறிக்கை!

செவ்வாய், 15 மார்ச் 2022 (12:30 IST)
எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம்.

 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது ரூபாய் 58.23 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இன்று காலை முதல் வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வருமானத்தை விட 3928 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக எஸ் பி வேலுமணி குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தெரிகிறது. 
 
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, 
 
எஸ்.பி.வேலுமணி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் உள்ளிட்டோரை குறிவைத்து சோதனை நடக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக அரசின் தீய முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து, அதிமுக சோதனைகள் அனைத்தையும் வெல்லும் என்று தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்