டிஃபன், லன்ச், ரோஸ் மில்க்... வேலுமணி வீட்டு வாசலில் பலே கவனிப்பு!

செவ்வாய், 15 மார்ச் 2022 (13:01 IST)
எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் குவிக்கப்படும் அதிமுக தொண்டர்களுக்கு காலை உணவு மற்றும் தேவையானவை வழங்கப்படுகிறது.  

 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது ரூபாய் 58.23 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இன்று காலை முதல் வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வருமானத்தை விட 3928 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக எஸ் பி வேலுமணி குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தெரிகிறது. 
 
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் குவிக்கப்படும் அதிமுக தொண்டர்களுக்கு காலை உணவாக கிச்சடி, உப்புமா வினியோகிக்கப்பட்டது. பின்னர் இடையிடையே தேநீர், பிஸ்கட், மிக்சர் என வரிசையாக வழங்கப்படுகிறது. அதோடு வெயில் அதிகமானதால் ரோஸ் மில்க் கொடுக்கப்படுகிறது. 

தற்போது மதிய இடைவெளியில் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்