மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை: அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (19:15 IST)
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகத் தான் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்த வில்லை என்றும் மத்திய அரசிடம் பணம் வாங்க வேண்டுமென்றால் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதாக மட்டுமே செய்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 மேலும் மின்சார வாரியத்தில் ஏற்படும் நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது சரியா என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்