உதயநிதி அளவுக்கு நான் நல்ல நடிகர் அல்ல: ’அரபி’ படம் குறித்து அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (18:18 IST)
உதயநிதி அளவுக்கு நான் நல்ல நடிகர் இல்லை என அரபி என்ற படத்தில் நடித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த அரபி என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணம் காரணமாக டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து கூறிய அண்ணாமலை உதயநிதி அளவுக்கு நான் நல்ல நடிகர் இல்லை என்றும்,  சராசரி நடிகர்தான் என்று கூறியுள்ளார் 
 
கர்நாடகாவில் நீச்சல் வீரர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒரே ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நான் நடித்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் நான் நடித்தால் என் படத்துக்கு நானே டிக்கெட் வாங்கி நானேதான் படம் பார்க்க வேண்டும் என்றும் அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்