சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்! ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கைக்கு அண்ணாமலை பதிலடி..!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (10:57 IST)
சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருந்த நிலையில் அவர் மீது 500 கோடி ரூபாய் தர வேண்டும் என்று குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்றும் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த நிலையில் இந்த எச்சரிக்கைக்கு சற்று முன் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில் திமுகவினருக்கு சொந்தமான பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்துவிட்டு அடுத்த வரியில் திமுக உறுப்பினர் ஒருவர் நிர்வாகியாக இருந்தாலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.
 
ஒருபுறம் இது திமுக சொத்து இல்லை என்றும், மறுபுறம் வழங்கப்பட்ட திமுகவினின் சொத்து விவரம் பொய் என்றும் கூறுவதற்கு மட்டும் திமுக அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
உங்கள் கட்சி தலைவருக்கும் இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து இழப்பீடு கோரி சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்எஸ் பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்