அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? கே.எஸ்.அழகிரி கேள்வி..!

ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (10:27 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தனக்கு வீட்டு வாடகை உள்பட வீட்டு செலவுக்கு தனது நண்பர்கள் கொடுத்து உதவுகின்றனர் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்  கே.எஸ்.அழகிரி  எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை எம்எல்ஏ, ஒருமுறை எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான் நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு கொண்டு இருக்கிறேன்

ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருப்பதாக கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே கால் லட்ச ரூபாய் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? மூன்று லட்ச ரூபாய் கைகடிகாரம் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு பாஜக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்