தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்: தேதியை அறிவித்த அண்ணாமலை!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:20 IST)
தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக கண்டித்து வருகிறார். திமுக அரசில் ஊழல் மற்றும் அமைச்சர்கள் குறித்தும் அவர் விமர்சனம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஜூலை 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்