தமிழக ஆளுனராக தொடர்கிறாரா ஆர்.என்.ரவி? அண்ணாமலை திடீர் சந்திப்பு..!

Siva
புதன், 24 ஜூலை 2024 (07:05 IST)
தமிழக ஆளுநரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்ற நிலையில் மத்திய அரசு அவரை மீண்டும் தமிழக ஆளுநராக நீடிக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழக ஆளுநரை அண்ணாமலை சந்தித்தபோது இந்த தகவலை அண்ணாமலையிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பின்போது ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம், தமிழகத்தில் நடக்கும் என்கவுண்டர்கள், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் பேசப்பட்டு இருப்பதாகவும், ஆளுநர் நீடிப்பு குறித்த அறிவிப்பு வெளியானதும் இந்த பிரச்சனையில் ஆளுநர் தலையிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் சென்னைக்கு சமீபத்தில் வந்திருந்த போது அண்ணாமலை குறித்த புகார்கள் அவரிடம் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தமிழக தலைவர், மிக வேகமாக வளர்ந்து வரும் அரசியல் தலைவர் மீது புகார் வருவது சகஜம் தானே, இதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் என்று மோகன் பகவத் இடம் கூறியதாகவும் இருப்பினும் அண்ணாமலை பற்றி வரும் செய்திகள் நல்லவிதமாக இல்லை என்று மோகன் பகவத் சலித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் ஆளுநர் ரவிக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அண்ணாமலை பதவி பறிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்