அரியர் வைத்தவர்களுக்கு சிறப்பு தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (12:58 IST)
பொறியியல் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
2001 - 2002 கல்வி ஆண்டின் மூன்றாவது செமஸ்டரில் இருந்து 2002 - 2003 கல்வி ஆண்டின் முதல் செமஸ்டரில் இருந்து இறுதி செமஸ்டர் வரை பொறியியல் படித்தவர்களுக்கு தங்களது பொறியியல் படிப்பை முடிக்க ஒரு வாய்ப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
இந்த கல்வி ஆண்டின் காலத்தில் அரியர் வைத்தவர்கள் தேர்வு எழுத விரும்பினால் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூபாய் 5000 செலுத்தி www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
 
இந்த தகவல் இதுவரை பொறியியல் படிப்பை முடிக்காமல் அரியர் வைத்தவர்களுக்கு ஒரு கூடுதல் அவகாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்