பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை தகவல்

வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:07 IST)
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கவுன்சிலிங் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் அறிமுக வகுப்பை வரும் 14ம் தேதி நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன 
 
மேலும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
இதுகுறித்த விரிவான விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்