1100 ஆண்டுகள் பழமையான ஒன்பது கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன!

J.Durai

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (13:22 IST)
திருப்பூர் அருகே 1100 ஆண்டுகள் பழமையான ஒன்பது கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பல்லடத்தை அடுத்த கோயில் பாளையத்தில் பழமையான தலைக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் குறித்து அழகுமலை ஊராட்சி தலைவர் தூய மணி வெள்ளைச்சாமி கோயில் தர்மகத்தா ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பூர் வீரராஜசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சுகுமார் பொன்னுச்சாமி ஆகியோர் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
 
இந்த ஆய்வில் ஒரு வட்ட எழுத்து மட்டும் எட்டு தமிழ் கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர்.
 
இது குறித்து ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் ரவிக்குமார் கூறியதாவது:
 
திருப்பூரில் இருந்து தென்கிழக்காக அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரையிலுள்ள பெருவழியில் 14- ஆவது கிலோ மீட்டரிலும் மேற்கு கடற்கரை நகரமான முசிறியில் இருந்து பாலக்காட்டு கணவாய் வழியாக வெள்ளலூர் சூலூர் காங்கயம் கரூர் வழியாக பூம்புகார் வரை சென்ற பண்டைய கொங்கப் பெருவெளியில் அமைந்துள்ள கிராமம்தான் கோயில் பாளையம் என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்