ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா: அன்புமணி ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:55 IST)
விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதஆஸ் அவர்களுக்கும் இடையில் கருத்துப்போர் நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளே இதற்கு காரணம்
 
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸை அடுத்து தற்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியும் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டஈடும் முத்தமிழ் செல்வனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அன்புமணி கூறியதாவது:
 
தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு வன்னியர்களின் மீது பாசம் வந்துவிடும் அவருக்கு செலக்டிவ் அம்னீஷியா. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் ஸ்டாலினின் அறிவிப்பு விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வெளியிட்ட அறிவிப்பு. தேர்தல் முடிந்தவுடன் இந்த அறிவிப்பை அவர் மறந்துவிடுவார் என்றும் தெரிவித்தார்.
 
அன்புமணியின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்