அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை, அன்புமணி முதல்வர் வேட்பாளர்: ராமதாஸ் அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:33 IST)
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்றும் அன்புமணி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அன்புமணி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாமக தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்த தேர்தலில் அன்புமணி உள்பட பாமகவினர் யாரும் வெற்றி பெறவில்லை
 
இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட நிலையில் அடுத்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் 
 
அதிமுகவுடன் எந்த விரிசலும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிமுக எதிர்கட்சியாக இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் ஆனால் 2026 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இருக்காது என்றும் அன்புமணி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்