சசிகலாவின் பணம் அப்போலா முதல் அக்ரஹார சிறை வரை பாயும் - ஆனந்தராஜ் விளாசல்

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (11:56 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அவர் எதுவும் செய்வார் என அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், அதிமுகவின் தலைமைக்கு சசிகலா முன்னிறுத்தப்பட்ட போது, அது பிடிக்காமல் கட்சியிலிருந்து விலகினார் நடிகர் ஆனந்தராஜ். அதன் அவ்வப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ சசிகலாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அவர் அக்ரஹார சிறையை மட்டும் விலைக்கு வாங்கவில்லை. அப்போலோ மருத்துவமனையில் ஜெ.வின் மரணம் குறித்த ரகசியங்களைம் அவர் மறைத்தார்” எனக் கூறினார்.
 
மேலும், நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு அதிமுக அமைச்சர்கள் நாகரீகமற்ற முறையில் பதில் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை” எனவும் கூறினார்.
அடுத்த கட்டுரையில்