சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தற்போதைய மழை காரணமாக குளிர்ச்சியான தட்பவெப்பம் உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.