ஜெயலலிதா-சோபன் பாபு மகள்?: டிஎன்ஏ ஆதாரம் எடுக்க அம்ருதா தீவிரம்!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (11:45 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக்கொள்ளும் பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தான் ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் தான் பிறந்தேன் என்பதை நிரூபிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
 
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தால் அவரது உடலில் இருந்து டெஸ்டுக்கு ஏதாவது எடுத்திருக்கலாம் என, அம்ருதா கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய மருத்துவ நண்பர் ஒருவர் மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரை அம்ருதா சந்தித்துப் பேசியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரது உடலில் இருந்து எதாவது டெஸ்ட்க்கு எடுத்துருப்பீங்க. அதை எனக்கு டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு நீங்கள் கொடுத்து உதவினால் வசதியாக இருக்கும். உங்ககிட்டதான் நான் அதை வாங்கினேன் என்பதை எங்கும் சொல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
 
அதே நேரத்தில் அம்ருதாவின் அண்ணன் முறையான சோபன் பாபுவின் மகனும் இந்த டிஎன்ஏ டெஸ்ட்க்கு வருவதாக சொல்லியிருப்பதாக தெரிகிறது. நான் தான் ஜெயலலிதாவின் வாரிசு என உறுதியாகிய பின்னர் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்குவேன் என அம்ருதா உறுதியளித்துள்ளாராம்.
 
அப்பல்லோ தரப்பில் இருந்து அம்ருதாவுக்கு சாதகமாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். வரும் ஜனவரியில் அம்ருதா அடுத்த அதிரடியை தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்