முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்க நிறுவனம் செய்த கெளரவம்!

வெள்ளி, 10 ஜூலை 2020 (20:22 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு விருந்துகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்று அவரை கெளரவித்துள்ளது.
 
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘Paul Harris Fellow’ என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளார் என்று அதிமுக அறிவித்துள்ளது.

மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘Paul Harris Fellow’ என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.

*அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

— AIADMK (@AIADMKOfficial) July 10, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்