சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் இல்ல கட்டுபாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த ஆசாமி ஒருவர் முதலவர் இல்லத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் அதை கண்டுபிடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.
அப்போது உண்மையை ஒத்துக்கொண்ட வினோத் கண்ணன் தன் மனைவி தனக்கு சோறு போடாமல் பட்டினி போட்டதாகவும், அதற்கு பழிவாங்குவதற்காக மனைவியின் போனிலிருந்து அழைத்து இவ்வாறாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். வினோத் கண்ணன் இப்படி செய்வது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டும் இரண்டு முறை முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.