வெளிநாட்டு இயக்கங்களுடன் தொடர்பு; ஆம்பூரில் கல்லூரி மாணவர் கைது!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:05 IST)
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆம்பூரை சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து அந்த இயக்கங்களுடன் தொடர்பு கொள்பவர்களை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில காலமாக தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் தடை செய்யப்பட்ட இயக்கங்களை தொடர்பு கொள்வதாக மத்திய உளவுத்துறை சென்னையில் உள்ள உளவுத்துறைக்கு தகவல் அளித்தது. தகவலின்படி அவ்வாறாக தொடர்பு கொண்டவர் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவை சேர்ந்த 22 வயதான அன்சார் அலி என தெரியவந்துள்ளது.

அவரது வீட்டை சுற்றி வளைத்த போலீஸார் அதிரடியாக அன்சார் அலியை வளைத்து பிடித்தனர். பின்னர் அன்சார் அலியிடம் நடத்திய விசாரணையில் அவர் அங்குள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வருவதும், செல்போன், லேப்டாப் மூலம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்