500, 1000 என அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புதிதாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 1000 ரூபாய் நொட்டும் புதிய வடிவத்தில் சில மாதங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புதிதாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்திய பணக்காரர்கள் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு சக்திகாந்த தாஸிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இவர்தான் இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.