நீட் விலக்கு விவகாரம்: இன்று அனைத்து கட்சி கூட்டம்!

சனி, 5 பிப்ரவரி 2022 (07:37 IST)
நீட் விலக்கு விவகாரம் குறித்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்திலேயே இயற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது 
 
கவர்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்டமாக செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாரதிய ஜனதா புறக்கணித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்